மத்திய கிழக்கு

ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது: இஸ்ரேலின் நெதன்யாகு

ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்காவுடனான முழு ஒத்திசைவுடன் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றின் வழியாக அவர் அவ்வாறு கூறினார்.

“இந்தச் செயல்பாட்டின் தொடக்கத்திலிருந்து ஈரானின் அணுவாயுத தளங்கள் எப்படியேனும் அழிக்கப்படும் என்று நான் வாக்குறுதி அளித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வாக்குறுதி நிறைவு செய்யப்பட்டுள்ளது,” என்று நெட்டன்யாஹு கூறினார்.

ஈரானின் அணுவாயுதத் திட்டம் ஈஸ்ரேலுக்கும் உலக அமைதிக்கும் மிரட்டல் விடுப்பதாகக் கூறிய நெட்டன்யாஹு, டிரம்ப் இஸ்ரேலுக்கு வேறு எவரும் போல் அல்லாத நண்பர் எனப் புகழ்ந்தார்.

டிரம்ப்பை வலிமைமிக்கத் தலைவர் எனப் பாராட்டிய நெட்டன்யாஹு, தமக்கும் டிரம்ப்புக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பற்றியும் தம் பதிவில் குறிப்பிட்டார்

“டிரம்ப் என்னையும் நம் படைகளையும் நம் மக்களையும் ஆசிர்வதித்தார். நான் அவரையும் அமெரிக்க விமானிகளையும் மக்களையும் வாழ்த்தினேன்,” என்று நெட்டன்யாஹு கூறினார்.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.