ஐரோப்பா

பிரான்சில் இசை நிகழ்வின்போது பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு : 17 பேர் வைத்தியசாலையில்!

பிரான்ஸில் ஒரு இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற தாக்குதலில் 17 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மெட்ஸில் நடந்த உலகளாவிய இசை தின கொண்டாட்டத்தின்போது 50,000இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது 17 பெண்கள் “சிரிஞ்ச் ஊசிகளால் குத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த பெண்கள் அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 17 தொடக்கும் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மெட்ஸின் மேயர் பிரான்சுவா க்ரோஸ்டிடியர் உறுதிப்படுத்தினார்.

மேற்படி தாக்குதலை நடத்தியவரை கண்டறிவதற்காக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்