இலங்கை செய்தி

தொழில்சார் கௌரவம் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் , ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்கவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.

தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதி செவிமடுத்தார்.

அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

“ பாடசாலைகளில் பணியாற்றி அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

எனவே ஆசிரியர் சேவை யாப்பிற்கு இணங்க, போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” எனவும் ஜனாதிபதி கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை