இந்தியா செய்தி

பூஜை பிரசாதத்தை சாப்பிட்டதால் தாய் அடித்து 4 வயது மகள் பலி: இந்தியாவில் கொடூரம்

இந்தியாவின் பிஹார் மாநிலத்தில், சத் பூஜைக்காகத் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தைப் பூஜைக்கு முன்பாகச் சாப்பிட்டதாகக் கூறி தாய் தாக்கியதில் நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் பிஹார் மாநிலத்தில், சத் பூஜைக்காகத் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தைப் பூஜைக்கு முன்பாகச் சாப்பிட்டதாகக் கூறி தாய் தாக்கியதில் நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பிஹார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் தாயான ரீனா குமாரியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடஇந்தியாவில் தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களின் நலன், செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி சூரிய பகவானை வழிபடும் சத் பூஜை கொண்டாடப்படுவது வழக்கம்.

இதற்கான ஏற்பாடுகளில் ரீனா குமாரியின் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் சிலர் பூஜைக்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தனர்.

இதன்போது வீட்டில் பிரசாதம் தயாரித்துக்கொண்டிருந்த ரீனா குமாரியின் நான்கு வயது மகள் சுஹானி, பூஜைக்காகத் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தாய், சிறுமியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் மரணம் குடும்பத்தினரைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தனது மகளின் உயிரிழப்புக்குக் காரணமான மனைவிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என சிறுமியின் தந்தை ராஜு பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி