இலங்கை செய்தி

இலங்கையில் FBI விசேட குழு: பின்னணி என்ன?

இணையவழி மோசடிகளை எதிர்கொள்ளவும், நாடுகடந்த குற்றக் கும்பல்களை முறியடிக்கவும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது.
FBI

இணையவழி மோசடிகளை எதிர்கொள்ளவும், நாடுகடந்த குற்றக் கும்பல்களை முறியடிக்கவும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது.

இதற்கமைய இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (FBI) சார்லோட் களப் பணியகத்தைச் சேர்ந்த குழுவினர், நவம்பர் 16 முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பில் பயணம் மேற்கொள்கின்றனர்.

இவர்கள், இலங்கையில் இயங்கும் மோசடி மையங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய விசாரணைகளுக்கு ஆதரவளிக்கவும், சிறப்புத் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கவும், அத்துடன் நாடுகடந்த மோசடி வலைப்பின்னல்களைக் கண்டறிந்து முறியடிப்பதற்கான அமெரிக்க மற்றும் சிறிலங்கா அதிகாரிகளின் திறனை வலுப்படுத்தவும் எவ்பிஐ ஒரு தனித்துவமான குழுவை அமைத்துள்ளது.

இந்த வருகையின் போது, ​​எவ்பிஐ அதிகாரிகள், இலங்கை சட்ட அமுலாக்கப் பங்காளிகளுடன் இணைந்து புலனாய்வு நுட்பங்கள், டிஜிட்டல் தடயவியல் மற்றும் வழக்கு உருவாக்கம் போன்ற அம்சங்களில் பணியாற்றுவார்கள்.

இந்த ஒத்துழைப்பானது, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், குற்றச்செயல்களைக் கண்டறியவும், இணையவழி மோசடிகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக வலுவான வழக்குகளைக் கட்டமைக்கவும் புலனாய்வாளர்களுக்கு உதவும்.

மேலும், இலங்கையின் நிலப்பரப்பைப் பயன்படுத்தி நாடுகடந்த குற்றக் கும்பல்கள் இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் இலங்கையின் திறனையும் இது பலப்படுத்தும்.

“வெளிநாடுகளில் இயங்கும் குற்றக் கும்பல்கள் பல பில்லியன் டொலர்களைத் திருடி வருகின்றன; அவற்றை ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்தார்.

“எவ்பிஐயின் புலனாய்வு நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை சிறிலங்கா சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகளைத் தேடிப் பிடிக்கவும், மேலும் பல அமெரிக்கர்களும் இலங்கையர்களும் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் தடுக்கவும் முடியும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வருகையானது, புலனாய்வுத் திறன்களை வலுப்படுத்தவும், மோசடி மையங்களின் செயல்பாடுகளை எதிர்கொள்ளவும் சிறிலங்கா அதிகாரிகளுடன் எவ்பிஐ மேற்கொள்ளவிருக்கும் நீண்டகால ஈடுபாட்டின் தொடக்கமாகும்.

இந்த முன்னெடுப்பிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆதரவளிப்பதுடன், எவ்பிஐயுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயற்படுகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை