ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சீனாவின் கனிம ஆதிக்கத்துக்கு சவால்: பிரான்ஸ் – மலேசியா புதிய கூட்டணி

பாதுகாப்புத்துறை மற்றும் அரிய மண் கனிமங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு பிரான்ஸ் மற்றும் மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளன.

பாதுகாப்புத்துறை மற்றும் அரிய மண் கனிமங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு பிரான்ஸ் மற்றும் மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், மலேசியாவுக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், உயர்கல்வி, எரிசக்தி மற்றும் முக்கிய கனிம வளங்கள் தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக, மின்சார வாகனங்கள் மற்றும் இலத்திரனியல் உற்பத்திக்குப் பயன்படும் அரிய மண் கனிமங்களின் விநியோகத்தைப் பல்வகைப்படுத்துவதில் இரு நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மலேசியாவின் பேராக் மாநிலத்தில் ஆண்டுக்கு சுமார் 13,000 மெற்றிக் தொன் அரிய மண் கனிமங்களைப் பதப்படுத்தக்கூடிய நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

உலகளாவிய அரிய மண் கனிம விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனைச் சார்ந்திருப்பதைக் குறைத்து மாற்று விநியோக வழிகளை உருவாக்குவதே இந்தக் கூட்டாண்மையின் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், பாதுகாப்புத் தொழில்துறை, இணையவழிப் பாதுகாப்பு மற்றும் குறைக்கடத்தி உற்பத்தி உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.

மக்ரோனின் இந்த விஜயம், பிரான்ஸ் – மலேசிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி