ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் விசா நீடிப்புக்கு புதிய நிபந்தனை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு விடுமுறை விசா (Working Holiday Visa) மூலம் தங்கும் வெளிநாட்டுப் பயணிகள், இரண்டாவது ஆண்டுக்கான விசா நீடிப்பைப் பெறுவதற்கு கிராமப்புறங்களில் கூடுதலாக ஒரு மாதம் பணிபுரிய வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு விடுமுறை விசா (Working Holiday Visa) மூலம் தங்கும் வெளிநாட்டுப் பயணிகள், இரண்டாவது ஆண்டுக்கான விசா நீடிப்பைப் பெறுவதற்கு கிராமப்புறங்களில் கூடுதலாக ஒரு மாதம் பணிபுரிய வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை மூன்று மாதங்கள் கிராமப்புறங்களில் பணிபுரிய வேண்டியிருந்த நிலையில், இனி நான்கு மாதங்கள் பணிபுரிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

ஆஸ்திரேலியாவின் விவசாயம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், நாட்டுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு விடுமுறைத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஆரம்பத்தில் ஒரு வருட விசா வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் குறிப்பிட்ட காலம் பணிபுரிவதன் மூலம் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டுகளுக்கான விசா நீடிப்பைப் பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியா வரும் இளைஞர்கள் விவசாயம், குழந்தைப் பராமரிப்பு, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த உள்துறை அமைச்சர் டோனி புர்க், வேலைவாய்ப்பு விடுமுறை விசா மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கும், குறிப்பாக விவசாயம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இத்திட்டத்தின் கீழான வருகையாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும்போது, அதனை முறையாக நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிரித்தானியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் இளைஞர்களுக்கு கிராமப்புறப் பணிகள் தொடர்பான இந்த நிபந்தனைகள் பொருந்தாது. இரு நாடுகளின் முந்தைய அரசாங்கங்களுக்கு இடையே 2021ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விசேட ஏற்பாட்டின் அடிப்படையில் இந்த விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பிரித்தானிய இளைஞர்களின் ஆஸ்திரேலிய வருகை அதிகரித்துள்ளதுடன், கிராமப்புறங்களில் தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி