இலங்கை

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனத்தினால் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 935 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1,190 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 1,175 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அரிசி கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வெள்ளை சீனியின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 272 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று (08) முதல் அமலுக்கு வருகிறது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்