உலகம்

சக்திவாய்ந்த எல்நினோ நிகழ்வு – பஞ்சத்தில் சிக்கும் 49 மில்லியன் மக்கள்

சக்திவாய்ந்த எல் நினோ வானிலை நிகழ்வானது, 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 49 மில்லியன் மக்களைக் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் (WFP) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கு 81 சதவிகித வாய்ப்பு இருப்பதாக ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைந்தது 1982-ஆம் ஆண்டிலிருந்து இல்லாத அளவுக்கு மிக வெப்பமான நிலையை எட்டும் என்றும், இது 1950-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்படக்கூடிய மிக வலுவான நிகழ்வாக   இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எல்நினோ நிலைமையானது தென்னாப்பிரிக்காவில் வறட்சி, ஆசியாவின் சில பகுதிகளில் பருவமழை தாமதமாவது மற்றும் பிற இடங்களில் சீரற்ற மழைப்பொழிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை கடந்த காலங்களில் மிகப் பெரிய பட்டிணியை ஏற்படுத்தியதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்