உலகம்

இம்ரான்கானுக்கு மருத்துவ வசதிகளை வழங்குமாறு ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவருக்கு போதுமான மருத்துவ வசதிகளை வழங்குமாறு ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஐ.நா. நிபுணர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, அவரது தடுப்புக்காவலில் உள்ள “சட்டவிரோத” கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் கான் எட்டு மாதங்களுக்கும் மேலாக தனது குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை என்பதையும், விழித்திரை  அடைப்பு காரணமாக அவரது பார்வை கணிசமாக மோசமடைந்துள்ளது என்பதையும் அவ் அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ.நா. செயற்குழு, 2024-ல் கானின் சிறைவாசம் தன்னிச்சையானது என்று தீர்மானித்துள்ளது. 

அதே நேரத்தில், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் அவரது தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவர்களில் நிபுணர் ஒருவர், கிட்டத்தட்ட முழுமையான தனிமைச் சிறை உட்பட அவரது “மனிதாபிமானமற்ற நடத்தையை” முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஏப்ரல் 2022-ல் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஆகஸ்ட் 5, 2023 இல் கைது செய்யப்பட்ட கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்