அமெரிக்காவின் இருவேறு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
அமெரிக்காவின் ஆன்டிகுவா (Antigua) மற்றும் பார்புடா (Barbuda) பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பார்புடாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கோட்ரிங்டனுக்கு தென்கிழக்கே இந்த நலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




