ஸ்டார்மருக்கு பதிலாக ரெய்னர் அல்லது பர்ன்ஹாம் தலைவராக வேண்டும் – பசுமைக் கட்சி தலைவர்
பிரதமர் ஸ்டார்மர் (Starmer) பதவியிலிருந்து விலகி, ஏஞ்சலா ரெய்னர் (Angela Rayner) அல்லது ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham)
தொழிலாளர் கட்சி தலைவராக வர வேண்டும் என பசுமைக் கட்சி தலைவர் சாக் பொலான்ஸ்கி (Zack Polanski) தெரிவித்தார்.
ஸ்கை நியூஸ் இற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்டார்மரை விட ரெய்னரும் பர்ன்ஹாமும் தனது அரசியல் நிலைப்பாடுகளுக்கு நெருக்கமானவர்கள் என கூறினார்.
மேலும், வாழ்க்கைச் செலவு நெருக்கடியை சமாளிப்பதிலும், மக்களின் நலனில் அக்கறை கொள்வதிலும் அவர்கள் இருவரும் முனைப்புடன் இருப்பதாகவும் பசுமைக் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவர்களின் சில கொள்கைகள் குறித்து தமக்கு இன்னும் சந்தேகங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொழிலாளர் கட்சியும் அதன் அரசாங்கமும் தவறான முடிவுகளை எடுத்து வரும் நிலையில், ரெய்னரும் பர்ன்ஹாமும் ஏன் அமைதியாக உள்ளனர் என்பதே தனது கேள்வி என்றும் கூறினார்.
ஸ்டார்மரை நீக்கி, தொழிலாளர் கட்சியை இடதுசாரி மற்றும் முற்போக்கான பாதைக்கு மாற்றுவது முக்கிய முன்னேற்றமாக இருக்கும் என்றும் பொலான்ஸ்கி தெரிவித்தார்.




