ஐரோப்பா

உலக அழிவுக்கு தயாராகும் மக்கள் – பொருட்களை வாங்கி குவிப்பதால் பீதி

மக்கள் உலக அழிவுக்கு தயாராகுவதுபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருட்களை வாங்கிக் குவிப்பதாக ப்ளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை பொருட்களை விற்கும் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாங்குபவர்கள் உலக அழிவு நெருங்கிவிட்டது போலத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளன.

நுகர்வோர் அதிக அளவில் புரொப்பேன், தண்ணீர் புட்டி, மற்றும் முகாம் உபகரணங்களை வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா முதல் ஜப்பான் வரையிலும், ஜெர்மனி முதல் நோர்வே வரையிலும் உலகம் முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட அவசரகால ஆயத்தப் பிரச்சாரங்களும் நுகர்வோர் பெருமளவில் பொருட்களை சேமிக்க முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் சைபர் தாக்குதல் அச்சம், மக்கள் பணப்பறிவர்த்தனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக அவசரகாலங்களில் ஏடிஎம் உள்ளிட்ட தொழில்நுட்ப நடவடிக்கைகள் முடங்கும் வாய்ப்புள்ளதாகவும், மக்கள் கைகளில் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்