இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
Pakistan cricket team to tour Sri Lanka
பாகிஸ்தான்(Pakistan) தேசிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், தொடரின் அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி(Rangiri) தம்புள்ளை(Dambulla) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் ஜனவரி 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு(England) எதிராக ஒருநாள் மற்றும் T20 தொடர் ஆரம்பமாகும்.
ஒருநாள் போட்டிகள் ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்திலும் T20 போட்டிகள் பல்லேகலே(Pallekele) கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும்.





