ஐரோப்பா

இங்கிலாந்தில் பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால போராட்டம் நிறைவு

இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த அரசாங்கத்தின் சலுகையை ஏற்பதாக வாக்களித்துள்ள நிலையில் மருத்துவர்களின் தொடர்  போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தில், உள்ளூரில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் 2016 ஆம் ஆண்டின் வழக்கமான பயிற்சி மருத்துவர் ஒப்பந்த விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரியாக 6.6 சதவிகித ஊதிய உயர்வு, ஏப்ரல் 2027-க்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 4,500 சிறப்புப் பயிற்சி இடங்களும் வழங்கப்படும்.

இதன்படி பயிற்சி மருத்துவர்களின் ஊதியம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சராசரியாக 35.2 சதவிகிதம் அதிகமாக இருக்கும்.

சுகாதாரச் செயலாளர் ஜேம்ஸ் முர்ரே இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார்.  இது தேசிய சுகாதார சேவை சீர்குலைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும்” மற்றும் சுகாதார சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தவும் அனுமதிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்