ஓவல் அலுவலகத்தில் இனி எந்த மாற்றமும் செய்ய முடியாது – நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
ஓவல் அலுவலகம் தொடர்பான நிர்வாக உத்தரவு ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம், எதிர்காலத்தில் வரும் ஜனாதிபதிகள் ஓவல் அலுவலகத்தில் மாற்றங்களை கொண்டுவருவது தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், நாங்கள் இதை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக மாற்றுகிறோம்.
இனி யாரும் இதைத் தொடவோ, அழிக்கவோ அல்லது முட்டாள்தனமான நபர்களால் இடித்துவிட்டு, வேறு வடிவில் எதையும் கட்டவோ அனுமதிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய நடைமுறைப்படி, அமெரிக்க அதிபர்களுக்கு வெள்ளை மாளிகையில் சில மாற்றங்களைச் செய்யும் அதிகாரம் உள்ளது. ஆனால், பெரிய அளவிலான திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதி தேவைப்படுகிறது.
இந்நிலையில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள இந்த நிர்வாக உத்தரவு இந்த நிர்வாக உத்தரவு, ஓவல் அலுவலகத்தையும் அதைச் சுற்றியுள்ள சில அறைகளையும் ஒரு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கிறது.
முன்னாள் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ட்ரம்ப், தனது பதவிக்காலத்தில் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் தோற்றத்தை பெருமளவில் மாற்றியமைத்துள்ளார். குறிப்பாக, அதில் பல தங்க நிற அம்சங்களைச் சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





