ஐரோப்பா

ஜெர்மனிக்குக் கடத்தப்படவிருந்த 3,000-க்கும் மேற்பட்ட சிலந்திகள் பறிமுதல்

ஜெர்மனிக்குக் கடத்தப்படவிருந்த 3,000-க்கும் மேற்பட்ட டாரன்டுலா (tarantula) வகைச் சிலந்திகள் பெருவின் லிமா விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் மற்றும் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான சுங்கச் சோதனையின்போது, ​​அவர்கள் கொண்டுவந்திருந்த சூட்கேஸ்களுக்குள் ஏதோ ஒன்று அசையும் தன்மையுடன் இருப்பதை அவதானித்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது இந்த கடத்தல் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

ஐரோப்பாவில் ஒரு டாரன்டுலா சிலந்தி சுமார் 500 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக வனவிலங்கு கட்டுப்பாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் கோரா சுவாரெஸ் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஒரே ஒரு கடத்தல் முயற்சியின் மூலம் சுமார் 1.5 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வணிகம் நடந்திருக்கக்கூடும் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்தச் சிலந்திகள், முட்டைகள், குஞ்சுகள் மற்றும் வளர்ந்த சிலந்திகள் என வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் இருந்தன என்றும் அவர் விவரித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்