ஐரோப்பா

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் நைஜல் ஃபாரேஜ்

பிரித்தானியாவின் சீர்த்திருத்த யூகே கட்சியின் தலைவரான நைஜல் ஃபாரேஜ் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி நன்கொடைகள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது  உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சிறப்புத் தேர்தலில் மீண்டும் தனது தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்றத்தின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் விசாரணைக்கும் உட்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

தனது தனிப்பட்ட செல்வம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை,” என்று கூறியுள்ளார்.

அத்துடன் “நல்ல சட்ட ஆலோசனையின்” பேரில் நாடாளுமன்ற விதிகளைத் தான் “பின்பற்றினேன்” என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்