உலகம்

காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு – 04 பேர் பலி

காசா பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அப்பகுதியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் மவாசி பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு குழந்தைகள் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் மேற்கு காசா நகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடார முகாமுக்கு அருகே நடந்த மற்றொரு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், கான் யூனிஸில் நடந்த மூன்றாவது வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், இரண்டு தாக்குதல்களும் தீவிரவாதிகளை குறிவைத்தே நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்