ஆஸ்திரேலியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்!
நெடுநாள் இழுபறிக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவரை ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான David Brat என்பவரே இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ராஜதந்திர சேவையிலும் தேர்ச்சி பெற்றவர்.
2024-ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய தூதுவர் பதவியில் இருந்து கரோலின் கென்னடி விலகிய பிறகு, நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த இடத்திற்கு தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரே இவர் பதவி விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தூதுவரின் நியமனத்தை முறையாக உறுதி செய்வதற்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




