IPL வரலாற்றில் மோசமான சாதனை: டெல்லி அணிக்கு பெரும் சோகம்!
IPL வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மோசமான சாதனையை Delhi Capitals அணி நேற்று பதிவு செய்துள்ளது.
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 39 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru மற்றும் Delhi Capitals ஆகிய அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற RCB அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி பவர்பிளே ஓவர்களில் முற்றிலும் நிலைகுலைந்தது.
பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் 6 ஓவர்களில் டெல்லி அணி வெறும் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இதன் மூலம், 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்த 14-3 ஓட்டங்களே மிகக்குறைந்த பவர்பிளே ஸ்கோராக இருந்தது. அந்த மோசமான சாதனையை நேற்று டெல்லி அணி முறியடித்துள்ளது.
இறுதியில் 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து அணி 75 ஓட்டங்களைப் பெற்றது.
76 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய RCB அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.





