இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

நமீபியாவின் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்கும் நெடும்போ நந்தி தைத்வா

நமீபியா நாட்டில் கடந்த மாதம் 27ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி(SWAPO) சார்பில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி தைத்வா 57.3% வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதே போல் ஆப்பிரிக்க கண்டத்தின் 2வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

அதே சமயம், தேர்தல் முடிவுகளுக்கு அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டில் உள்ள வேலையின்மை விகிதத்தை குறைக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் நெடும்போ நந்தி தைத்வா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்