ஐரோப்பா

ஜெர்மனி வான்வெளியில் பறந்த மர்ம பொருள் – விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கிழக்கு ஜேர்மனிக்கு சென்ற விமானம் ஒன்று தரையிறங்கும்போது பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

வான்வெளியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து  விமானங்கள்  திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..

இதற்கமைய மல்லோர்காவிலிருந்து வந்த  பயணிகள் விமானமும், லீப்ஜிக்-ஹாலே (Leipzig-Halle) விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த  சரக்கு விமானங்கள் பலவும் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு பரிசோதனை செய்யும் ரோபோ ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலையில் விமான நிலைய செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மேல் ட்ரோன்கள் பறக்கும் சம்பவங்களை ஜெர்மனியும் பிற ஐரோப்பிய நாடுகளும் பலமுறை குறிப்பிட்டுள்ளன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்