ஜெர்மனி வான்வெளியில் பறந்த மர்ம பொருள் – விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
கிழக்கு ஜேர்மனிக்கு சென்ற விமானம் ஒன்று தரையிறங்கும்போது பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. வான்வெளியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.. இதற்கமைய மல்லோர்காவிலிருந்து வந்த பயணிகள் விமானமும், லீப்ஜிக்-ஹாலே (Leipzig-Halle) விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த சரக்கு விமானங்கள் பலவும் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு பரிசோதனை செய்யும் ரோபோ ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளபட்டுள்ளன. […]



