இலங்கை செய்தி

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’: வவுனியாவில் அஞ்சலி!

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ இன்று (14) காலை வவுனியாவை சென்றடைந்தது.

யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை அடைந்தது.

இதன்போது, வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி செலுத்தியதுடன் அதனைத் தொடர்ந்து மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

அத்துடன் நகர வீதியின் ஊடாக சென்ற ஊர்தியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஊர்திப் பவனியானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பயணிக்கவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!