இலங்கை செய்தி

டயானாவுக்குப் பதிலாக முஜிபுர் ரஹ்மான் – அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது

டயானா கமகே தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை சமகி ஜன பலவேகய நியமித்துள்ளதாக அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டது.

இதன்படி வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படவுள்ளதாக சமகி ஜன பலவேகய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தது.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content