ஐரோப்பா

ஒடேசா கடற்கரையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 09 மாலுமிகள் உள்ளிட்ட 10 பேர் பலி

  • July 20, 2026
  • 0 Comments

உக்ரைன் நகரமான ஒடெசாவின் கடற்கரைக்கு அப்பால் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கினியா-பிசாவ் கொடியை ஏந்திச் சென்ற கப்பல் மீது ரஷ்யா குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல்  மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஒன்பது மாலுமிகளும், விமானி ஒருவரின் சடலங்கள்  மீட்கப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. சமீபத்திய வாரங்களில், ஒடெசா பகுதி தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இப்பகுதியில் […]

ஐரோப்பா

கோர தாண்டவம் ஆடிய ரஷ்யா : கீவ் மீது ஏவுகணை தாக்குதல்!

  • July 2, 2026
  • 0 Comments

ரஷ்ய படைகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கீவ் மீது  ஆளில்லா விமானம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ஒரு பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதனால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதுடன், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் பல கட்டங்களாக நிகழக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்த நிலையில், குடியிருப்பளர்கள் பலர் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த தாக்குதல்களில் கீவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷெவ்சென்கிவ்ஸ்கி (Shevchenkivskyi ) […]

உலகம்

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்

  • June 28, 2026
  • 0 Comments

குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள எட்டு அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளை  கூட்டு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலம் அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க இராணுவத்தின் இரண்டாவது அலைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக  இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாஷிங்டன் மீறியதாகக் ஈரான் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

  • June 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியில், பீரங்கி அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் ஆலை மீது நேற்றிரவு உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஃபிளமிங்கோ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தத் தாக்குதல்களால் டைட்டன்-பரிக்காடி ஆலையின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும்  ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவின் விளாடிமிர் பகுதியில் உள்ள “வ்டோரோவோ” எண்ணெய் இறைக்கும் நிலையம் மீதும் உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் : நோர்வே வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

  • June 2, 2026
  • 0 Comments

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதி கைப்பற்றப்பட்டால், லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து சாத்தியமான வாய்ப்புகளும் உள்ளதாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். நோர்வேயின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) தீவுக்கூட்டத்திற்கும் இடையே உள்ள சுமார் 400 மைல் அகலமுள்ள பகுதியை கைப்பற்ற ரஷ்யா தயாராகி வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் முகாமிட்டுள்ள ரஷ்யாவின் சக்திவாய்ந்த வடக்குக் […]

ஐரோப்பா

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல் – பலர் பலி!

  • May 19, 2026
  • 0 Comments

உக்ரைனின் வடக்குப் பகுதியான செர்னிஹிவ் மற்றும் சுமி பிராந்தியங்களில் ரஷ்யா ஏவுகணை மற்றும் ஆளில்லா ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் செர்னிஹிவ் (Chernihiv) பிராந்தியத்தில் உள்ள ப்ரைலுகி (Pryluky) நகரின் மையத்தில் நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 14 வயது சிறுவன் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உலகம்

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவுகணை தாக்குதல் !

  • May 4, 2026
  • 0 Comments

ஈரானின் 03 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் திடீர் தாக்குதல்கள் காரணமாக, துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு வரவிருந்த பல விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும், மேலும் பல விமானங்கள் மாற்று இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியப் பாதுகாப்பு குறித்த நிச்சயமற்ற தன்மையால், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்புப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.