Consent Preferences
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

உலகையே நெகிழவைத்த துணிச்சல்: அகமதுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய கௌரவம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள பாண்டி கடற்கரையில் (Bondi Beach) கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது துணிச்சலுடன் செயற்பட்டு பலரது உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமதுக்கு (Ahmed Al-Ahmed), ஆஸ்திரேலியாவின் உயரிய குடிமக்கள் வீர விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள பாண்டி கடற்கரையில் (Bondi Beach) கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது துணிச்சலுடன் செயற்பட்டு பலரது உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமதுக்கு (Ahmed Al-Ahmed), ஆஸ்திரேலியாவின் உயரிய குடிமக்கள் வீர விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சாம் மோஸ்டின் இந்த விருது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2025 டிசம்பர் 14ஆம் திகதி, யூதர்களின் ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்ட நிகழ்வின்போது இரண்டு தாக்குதல்தாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.

இதன்போது ஆபத்தைப் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் தலையிட்ட அகமது அல் அகமது, தாக்குதல்தாரிகளில் ஒருவரிடமிருந்து ஆயுதத்தைக் கைப்பற்றி அவரது தாக்குதலைத் தடுத்தார். இந்தச் சம்பவத்தின்போது அவர் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கும் உள்ளானார்.

அவரது அசாதாரண துணிச்சலைப் பாராட்டி, ஆஸ்திரேலியாவின் மிக உயரிய குடிமக்கள் வீர விருதான Cross of Valour வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெற்ற ஆறாவது நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதேவேளை, தாக்குதலின்போது மற்றவர்களைக் காப்பாற்ற முற்பட்டு உயிரிழந்த போரிஸ் குர்மன், சோபியா குர்மன் மற்றும் ரூவியன் மொரிசன் ஆகிய மூவருக்கும் மரணத்திற்குப் பின்னரான வீர விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய வகையில் மொத்தம் நான்கு பேருக்கு வீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அகமது அல் அகமது சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரது துணிச்சலைப் பாராட்டியிருந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி