இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் பெருமளவான வெடிப்பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்

சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் , ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பவை மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட எறிகணைகள் சிலவற்றில் இருந்து வெடிமருந்துகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வெடி பொருட்களையும், கைது செய்யப்பட்ட நபரையும்

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை