தளபதி 68 படத்தின் பாடலாசிரியராக இணைந்தார் மதன் கார்க்கி

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தின் பாடலாசிரியராக இணைந்தார் மதன் கார்க்கி.
இதற்கு முன் மதன்கார்கி விஜயின் கத்தி படத்திற்கு பாடலாசிரியராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், மீனாக்ஷி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான நடிகர்களான தம்பி பிரேம்ஜி முதல் மொத்த விபி கேங்கும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
பல வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ள அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
தளபதி 68 படத்தின் பூஜை விஜயதசமியை முன்னிட்டு நேற்று வெளியானது. ஏற்கனவே 15 நாட்கள் ஃபர்ஸ்ட் ஷெட்யூலே முடிந்து விட்டதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
#Leo is chasing ps1 world wide gross very soon. 🔥 A Film which released in same time zone with better promotions will be Deathroned by LEO which literally had zero offline promotions. @actorvijay truly king stuff 👑 pic.twitter.com/Y86on80kjR
— Actor Vijay Fans (@Actor_Vijay) October 25, 2023