பொழுதுபோக்கு

தொடர்ந்து தோற்றுப்போகும் லைக்கா.. ஹாட்ரிக் கொடுத்த புதிய தயாரிப்பு நிறுவனம்

பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பல கோடி முதலீடு செய்து சமீபகாலமாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அவ்வாறு தான் லைக்கா நிறுவனம் தொடர் தோல்வி படங்களால் நிதி நெருக்கடியை சந்தித்து உள்ளது. இதனால் படம் தயாரிப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே ப்ரொடியூசர் யுவராஜ் கணேசன் தொடர்ந்து ஹட்ரிக் வெற்றியை தனது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மூலம் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து மூன்று படங்களை தயாரித்து ஹட்ரிக் வெற்றியை இந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்து இருக்கிறது.

புதுமுக இயக்குனர் விநாயக் குட் நைட் என்ற படத்தை இயக்கியிருந்தார். மணிகண்டன் நடிப்பில் உருவான இந்த படம் குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக மீண்டும் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் படத்தை தயாரித்து வெற்றி கண்டது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தையும் தயாரித்து இருந்தது.

இந்த படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு சின்ன பட்ஜெட்டில் புதுமுக இயக்குனர்களை வைத்து வெற்றி கொடுத்து வருகிறார்கள். அடுத்ததாக இதே புரொடக்சன் ஹவுஸில் ஒன்ஸ்மோர் படம் உருவாகி வருகிறது.

இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படமும் கண்டிப்பாக வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்