பொழுதுபோக்கு

லியோ ஆடியோ லான்ச்… விஜய் எடுத்த அதிரடி முடிவு…

வாரிசு திரைப்படம் வெளியானதுமே விஜய்யின் லியோ பட அப்டேட் டைட்டில் டீசர் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தில் விஜய்யுடன் நீண்ட நாட்களுக்க்ப்பிறகு த்ரிஷா கதாநாயகியாகணைந்துள்ளார்.மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

லியோ படத்தில் சஞ்சய் தத் தான் விஜய்யின் அப்பாவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பல அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது

அதனைத் தொடர்ந்து லியோ இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
லியோ ஷூட்டிங் முடிந்த பின்னர் தான் தளபதி 68 தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீடு குறித்து விஜய் அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம்.

விஜய் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா எப்போதும் சென்னையில் நடப்பது தான் வழக்கம்.

ஆனால், லியோ இசை வெளியீட்டு விழாவை சென்னை இல்லாமல் மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது இதில் விஜய் மேலும் இரண்டு லொக்கேஷன்களை டிக் செய்துள்ளாராம். அதன்படி, திருச்சி, கோவை என இந்த இரண்டு நகரங்களில் எதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

இல்லையென்றால் ஏற்கனவே திட்டமிட்டபடி மதுரையில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளதாம்.இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content