பொழுதுபோக்கு

கேலியும், கிண்டலுக்கும் உள்ளான “லால் சலாம்” போஸ்டர்!! தலைவர் கூட கைகோர்த்த செம கூட்டணி

ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்மரமாக போய்க் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஷ்ணு விஷால், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கிறது. அத்துடன் இப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் வெளியானதில் இருந்து தற்போது வரை அதிக அளவில் கேலியும், கிண்டலும் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பலதரப்பட்ட கருத்துக்களையும் தெரிவித்து தலைவரை இப்படி அசிங்கப்படுத்தி விட்டீர்களே என்று ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அத்துடன் இந்த போஸ்டரை பார்த்த பிறகு ப்ளூ சட்டை மாறன் அவர் தரப்பிலிருந்து சில பதிவுகளை போட்டிருக்கிறார். அதாவது இது எடிட்டிங் பண்ணின போஸ்டர் மாதிரி இருக்கிறது. இது என்ன பிரியாணி கடைக்கு விளம்பரம் பண்ணுகிறீர்களா என்று கேலி செய்திருந்தார்.

மேலும் இது ரஜினி ரசிகர்களுக்கும் வருத்தத்தை அளித்திருக்கிறது. இதை சரி செய்யும் விதமாக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதாவது தலைவருடன் ஸ்டைலிஷ் செலிபிரிட்டி கைகோர்க்கிறார். இவர் யார் என்றால் மலிங்க சத்யா. இவர் லால் சலாம் படத்தில் முக்கியமான கேமியோ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்போது இவருடன் சேர்ந்து அதற்கான புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். இவர் பொதுவாக நடிகர்களுக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றுவார்.

அப்படிப்பட்ட இவர் லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார் என்றால் அது எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. .

அதிலும் இவர் அணிந்திருந்த சட்டையை பார்த்தால் ஒரு ஜோக்கர் போல தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் லால் சலாம் படத்தில் இவரோட கேரக்டர் என்னவாக இருக்கும். அத்துடன் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெளியிட்டு இப்படத்திற்கு எப்படியாவது ஹைப்பை ஏற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content