வட அமெரிக்கா

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கனடாவுக்கு விஜயம் – பிரதமர் அலுவலகம் தகவல்

ஜோர்தான் மன்னர், நாளை மறுதினம் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.

ஜோர்டான் மன்னரின் கனடிய விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் விசேடக் கவனம் செலுத்தப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

1999 ஆம் ஆண்டு பதவி ஏற்று கொண்ட கொண்டதன் பின்னர் ஏழாவது தடவையாக ஜோர்தான் மன்னர் கனடாவிற்கு விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content