இலங்கை

மீகொட பொருளாதார மையத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி காயம்!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இன்று (12) காலை கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது கடையில் காசாளராக இருந்த சிறுமியின் வயிற்றுப் பகுதியை நோக்கி 3 முறை சுட்டதில், சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடையின் அலமாரியில் இருந்த பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள், கீழே இருந்த இருந்து பெட்டகத்தின் பணத்தை பெற சாவியை கேட்டு குறித்த சிறுமியை சுட்டுள்ளனர்.அதன் பின் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

திருடப்பட்ட பணம் குறித்த விபரம் இதுவரை வெளிவராத நிலையில், காயமடைந்த சிறுமி தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்