பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டாருடனான போட்டியிலிருந்து பின் வாங்கிய சூர்யா?

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம், மாற்று தேதியில் வெளியிட பட குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட இரு வெவ்வேறு காலங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதே அக்டோபர் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “வேட்டையன்” என்கின்ற திரைப்படமும் வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாகவே இவ்வாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு முக்கிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள சில தகவல்களின்படி, கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகாது என்றும், மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் பட குழுவின் சார்பாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்