பொழுதுபோக்கு

கமலுக்கு போட்டியாக அவருடைய படமே ரிலீஸ்!! இது என்ன புது கதையா இருக்கு!!!

கமல்ஹாசன் நடித்துள்ள இந்திய 2 படத்துக்கு போட்டியாக அவர் நடித்துள்ள மற்றுமொரு பிரம்மாண்ட படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் விறுவிறுவென தயாராகி வரும் இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றது. அங்கு கமல்ஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரு மாதத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்கும் முழுவதுமாக நிறைவடைந்து விடும் என கூறப்படுகிறது. ஷூட்டிங் முடிந்ததும் பின்னணி பணிகளை ஆரம்பிக்க உள்ள இயக்குனர் ஷங்கர், இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், அப்படத்துக்கு போட்டியாக கமல்ஹாசனின் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். அதன்படி பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் புராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசனும் வில்லனாக நடிக்க உள்ளார்.

இப்படமும் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், இது இந்தியன் 2 படத்துடன் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

புராஜெக்ட் கே படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற மகாநதி படத்தை இயக்கியவர் ஆவார். புராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.

மேலும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content