பொழுதுபோக்கு

கபாலி பட நடிகை கர்ப்பமானார்… வெளிப்படையாக கொடுத்த போஸ்

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சயமானார்.

நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் சில நேரங்களில் இவர் பேசும் சர்ச்சை கருத்து, அனைவரையும் அதிர வைக்கும்.

அப்படி, பல நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்களென நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்ததும் சர்ச்சையானது.

ராதிகா ஆப்தே, வயலின் இசைக்கலைஞரான பெனடிக்ட் டெய்லரை 2012ல் திருமணம் செய்தார். 2011ல் லண்டனில் நடனம் பயிலச் சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் 2012ல் இருந்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் ராதிகா ஆப்தே லண்டனில் குடியேறியதாகவும் தகவல் வந்தது. லண்டன், மும்பை என்று படங்களுக்காக சுற்றி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிடாமல் இருந்த ராதிகா ஆப்தே தற்போது தனது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ராதிகா ஆப்தே நடித்திருக்கும் சிஸ்டர் மிட்நைட் எனும் படம் லண்டனில் நடைபெறும் பிஎப்ஐ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. அப்போது தான் கர்பம் தரித்த தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்