ஐரோப்பா

ஹாரியின் குழந்தைகளை பின்தொடர்ந்த பத்திரிக்கையாளர்கள் – பாதுகாப்பு குறித்து அச்சநிலை

இங்கிலாந்தின் கிராமப்புறப் பகுதியில் உள்ள பாடசாலையில் பயின்று வரும் இளவரசர் ஹாரியின் குழந்தைகளை சில பத்திரிக்கையாளர்கள் பின்தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹாரியின் செய்தித் தொடர்பாளர், அக்குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் மேற்கொள்ளப்பட்ட “மிகவும் பொறுப்பற்ற” ஊடுருவல் என்று விமர்சித்துள்ளார்.

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் தமது பிள்ளைகளுடன் இங்கிலாந்தில் குடியேறியுள்ளனர்.

அரச குடும்பவாழ்க்கையை விட்டு வெளியேறியுள்ள இந்த தம்பதியினர் தற்போது சாதாரண குடிமக்கள்போலவே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர்கள் பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் சமீபத்திய சம்பவமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

தங்கள் புதிய இல்லம் மற்றும் குழந்தைகளின் பள்ளி அமைந்துள்ள இடத்தைத் தனிப்பட்ட ரகசியமாக வைத்திருக்க அக்குடும்பம் முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்