அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகுகிறது ஜெயிலர் 2 திரைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வெற்றிப் படமான ‘ஜெயிலர் 2’, நவம்பர் 12-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) வெளியாகும் என்று அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 820 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனை படைத்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்த் மீண்டும் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்தியத் திரையுலக நட்சத்திரங்களான மோகன்லால், ஹிருத்திக் ரோஷன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை உட்பட 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




