குடியரசு கட்சியின் தோல்வி உக்ரைனுக்கு சாதமாக அமையுமா?
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினர் பெற்றுள்ள முன்னேற்றங்கள், ரஷ்யாவுடனான நான்கரை ஆண்டு காலப் போரில் உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளைப் பெற்றுத் தரும் என்று நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் ZDF தொலைக்காட்சியிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அடுத்த ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டைப் பெறுவதால் ஏற்படப்போகும் மாற்றங்கள், உக்ரைனுக்குச் சாதகமாக அமையும் என்று கூறினார்.
“அவர்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பிணைப்பை மீண்டும் வலுப்படுத்துவது குறித்துப் பேசுகிறார்கள்.
எனவே, அதிகாரச் சமநிலை உருவாகி, எங்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.




