செய்தி விளையாட்டு

2029 வரை கோல் வேட்டை தொடரும்; இங்கிலாந்து அணித் தலைவரின் அதிரடி முடிவு

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், ஜெர்மனியின் பாயர்ன் முனிச் Bayern Munich கழகத்துடன் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், ஜெர்மனியின் பாயர்ன் முனிச் Bayern Munich கழகத்துடன் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

தற்போது 33 வயதாகும் ஹாரி கேன், கடந்த 2023ஆம் ஆண்டு டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணியிலிருந்து 86 மில்லியன் பவுண்டுகளுக்கு பாயர்ன் முனிச் அணிக்கு மாறியிருந்தார். நான்கு ஆண்டுகளுக்கான அவரது முந்தைய ஒப்பந்தம் முடிவடைய இன்னும் 12 மாதங்களே எஞ்சியிருந்த நிலையில், இந்தப் புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பருவத்தில் 51 போட்டிகளில் விளையாடி 61 கோல்களை அடித்து கழக சாதனை படைத்த அவர், பாயர்ன் முனிச் அணி லீக் மற்றும் கிண்ணம் ஆகிய இரட்டைக் கிண்ணங்களையும் கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

புதிய ஒப்பந்தம் குறித்து கருத்துத் தெரிவித்த ஹாரி கேன்,

“பாயர்ன் முனிச் கழகம் எனது சொந்த வீடு போன்ற உணர்வைத் தருகிறது. இந்தக் கழகம், ரசிகர்கள் மற்றும் முனிச் நகரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. எங்களிடம் சிறந்த அணியும், வின்சென்ட் கொம்பனி போன்ற சிறந்த பயிற்றுவிப்பாளரும் உள்ளனர்.

இந்தக் கழகத்தின் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமையடைகிறேன். எனது குடும்பமும் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து இங்கு விளையாடுவதில் ஆர்வமாக இருந்தேன். எதிர்காலத்தில் இந்தக் கழகத்துடன் மேலும் பல கிண்ணங்களை வெல்ல எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், 36 ஆவது பிறந்தநாளுக்கு முன்னதாகவே பாயர்ன் முனிச் அணியுடனான அவரது எதிர்காலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 2028ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடர் மற்றும் 2030 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாகவும் அவர் ஜெர்மன் கழகத்திலேயே தொடரவுள்ளார்.

இங்கிலாந்தின் பிரீமியர் லீக் தொடரில் அலன் ஷீரரின் 260 கோல்கள் என்ற சாதனையை சமப்படுத்த ஹாரி கேனுக்கு இன்னும் 47 கோல்கள் தேவைப்படுகின்றன. ஜேர்மனியில் தொடர்ந்து விளையாடுவதற்கான அவரது தீர்மானம், அந்தச் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பைக் குறைத்துள்ளது.

நீண்டகாலமாக ஹாரி கேனை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டி வந்த பார்சிலோனா கழகத்தின் முயற்சிகளுக்கும், சவூதி அரேபியக் கழகங்களின் ஆர்வத்துக்கும் இந்தப் புதிய ஒப்பந்தம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

2025-26 பருவத்தில் இங்கிலாந்து மற்றும் பாயர்ன் முனிச் அணிகளுக்காக 65 போட்டிகளில் விளையாடிய ஹாரி கேன் 73 கோல்களை அடித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பலோன் டி’ஓர் விருது விழாவில் உலகின் சிறந்த ஆண் கால்பந்தாட்ட வீரராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார்.

புண்டெஸ்லிகா தொடரில் இதுவரை 102 போட்டிகளில் விளையாடி 102 கோல்களை அடித்துள்ள கேன், தொடர்ச்சியாக மூன்று கோல்டன் பூட் விருதுகளையும் இரண்டு லீக் சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார்.

ஜேர்மனிக்கு மாறியபோது, உலகின் உயர்ந்த மட்டத்தில் தனது திறமையை நிரூபிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னர் கழக அல்லது தேசிய அணிகளுக்காக எந்தவொரு முக்கிய கிண்ணத்தையும் வென்றிராத ஹாரி கேன், தற்போது பாயர்ன் முனிச் அணியுடன் ஐந்து முக்கிய கிண்ணங்களை வென்றுள்ளார். அத்துடன், 2024-25 பருவத்துக்கான புண்டெஸ்லிகாவின் சிறந்த வீரர் விருது உள்ளிட்ட பல தனிநபர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் பலோன் டி’ஓர் விருதை வென்ற முதல் புண்டெஸ்லிகா வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நடப்பு பருவத்தில் பாயர்ன் முனிச் அணிக்காக 12 கோல்களை அடித்துள்ள அவர், இதுவரை அந்தக் கழகத்துக்காக 161 போட்டிகளில் 156 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து ஆண்கள் கால்பந்தாட்ட அணியின் அதிக கோல்கள் அடித்த வீரராகத் திகழும் ஹாரி கேன், கடந்த செப்டெம்பரில் இங்கிலாந்து அணிக்காக 125 போட்டிகளில் விளையாடியதன் மூலம் பீட்டர் ஷில்டனின் சாதனையையும் சமப்படுத்தியுள்ளார்.

இவ்வாண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் ஆறு கோல்களை அடித்த அவர், உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 18 போட்டிகளில் 14 கோல்களை அவர் அடித்துள்ளார்.

கடந்த பருவத்தில் புண்டெஸ்லிகா மற்றும் கிண்ணப் போட்டிகளில் இரட்டைக் கிண்ணம் வென்றதுடன், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான பிரான்ஸ் பெக்கன்பவுர் சுப்பர் கிண்ணங்களையும் பாயர்ன் முனிச் அணியுடன் ஹாரி கேன் கைப்பற்றியுள்ளார்.

பாயர்ன் முனிச் கழகத்தின் விளையாட்டுப் பணிப்பாளர் கிறிஸ்டோப் பிராய்ண்ட் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஹாரி கேன் எங்களுடன் தொடர்ந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பலோன் டி’ஓர் விருது வென்ற வீரராக மட்டுமன்றி, சிறந்த அணிவீரர், தலைமைத்துவப் பண்பு கொண்டவர் மற்றும் உலகின் மிகச்சிறந்த முழுமையான முன்கள வீரராகவும் அவர் திகழ்கிறார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி