இஸ்ரேலின் பழிவாங்கும் செயற்பாடு – 250 குடும்பங்கள் நள்ளிரவில் வெளியேற்றம்
இஸ்ரேலியப் படைகள் மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகரத்திற்குள் நுழைந்து, சுமார் 250 குடும்பங்களை வெளியேற்றியுள்ளனர்.
சிலர் நள்ளிரவு வேளையில் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹெப்ரோன் நகரில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில், இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
1967-ல் இஸ்ரேல் மேற்குக் கரையை ஆக்கிரமித்த பிறகு, இதுவரை கண்டிராத அளவிலான வெளியேற்ற நடவடிக்கை இதுவாகும்.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோனில், இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையின் போது, பாலஸ்தீன குடியிருப்பாளர்களின் வீடுகளில் இஸ்ரேலியக் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




