அறிவியல் & தொழில்நுட்பம்

DeepSeek தொழில்நுட்பத்தை முழுமையாக அகற்ற அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புதுறை உத்தரவு

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சீனாவில் தயாரிக்கப்பட்ட டீப்ஸீக் DeepSeek செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவைகளை, அமெரிக்க குடிமை அரசாங்க நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளிலிருந்து முழுமையாக அகற்றுமாறு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

அத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, எதிர்காலத்தில் அமெரிக்க குடிமை அரசாங்க நிறுவனங்கள், அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப்ஸீக் DeepSeek  தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்குவதற்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டீப்ஸீக் DeepSeek தொழில்நுட்பம் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டும் அத்துறை, அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் அல்லது விநியோகஸ்தர்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், முக்கியமான தகவல்கள் சீனாவிற்குச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ளது.

மேலும், இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் தீங்கிழைக்கும் மென்பொருள் அல்லது பிற தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்க வர்த்தகத் துறை மற்றும் கடற்படை உள்ளிட்ட பல நிறுவனங்கள், அரசாங்க சாதனங்களில் அதன் பயன்பாட்டைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தன, மேலும் நியூயார்க் மற்றும் வர்ஜீனியா போன்ற மாநிலங்களும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்