ஐரோப்பா

இத்தாலியின் மிலன் நகரில் கூடுதல் பொலிஸார் குவிப்பு – 150 இடங்களில் சோதனை

கடந்த வார இறுதியில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, மீண்டும் வன்முறை வெடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், இத்தாலிய அதிகாரிகள் முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் களமிறக்கியுள்ளனர்.

மிலன், ரோம், டூரின், நேபிள்ஸ் மற்றும் பிற நகரங்களில் போராட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு உயர்வு, குறைந்த ஊதியம், ராணுவச் செலவுகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அக்டோபர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் ஆரம்பித்த போராட்டம் வன்முறையாக உருபெற்றுள்ளது.

இந்நிலையிலேயே  பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அரசாங்கம், மிலன் நகரில் ஏற்கனவே பணியில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கு உதவியாக, கூடுதலாக 500 வீரர்களை அங்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வன்முறைகளைத் தடுப்பதற்காக ட்ரோன் கண்காணிப்பு, ரயில் நிலையங்களில் தீவிர சோதனை மற்றும் விரைவுச் செயல் படைகள் (rapid-response units) போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அமல்படுத்தியுள்ளனர்.

போராட்டங்களுக்கு முன்னதாக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பொலிஸார் சிறப்பு சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்