வட்டி விகித அதிகரிப்பு தொடர்பில் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தீர்மானம்
பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கணிப்புகள் இருந்தபோதிலும், பேங்க் ஆஃப் இங்கிலாந்து (BoE) வட்டி விகிதங்களை 3.75 என்ற சதவீதத்தில் பராமரிக்க தீர்மானித்துள்ளது. பணவியல் கொள்கை குழு இன்று நடத்திய வாக்கெடுப்பில், 6-3 பேர் வட்டி விகிதங்களை பராமரிக்க வாக்களித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பிளவுபட்ட இந்த வாக்குகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் உருவாகும் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள், பணவீக்கத்தை மேலும் […]




