பொழுதுபோக்கு

இந்தியன் 2 – சிங்கம் களம் இறங்க தேதி குறிச்சிட்டாங்க???

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அதன் ரிலீஸ் தேதி கசிந்துள்ளது.

கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது சுமார் 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் இந்தியன் 2 படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் ரிலீஸ் வேலைகளும் மும்முரமாக தொடங்கியது. அதன்படி இப்படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வரும் முடிவில் இருந்த படக்குழு, பின்னணி பணிகள் முடிய தாமதம் ஆவதால் அதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது.

இதனால் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக இருந்த நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content