அமெரிக்க வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
அமெரிக்க வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு 50 பில்லியன் டொலராக அதிகரித்து ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தகவல் தொடர்புச் சிக்கலால் நாடு தழுவிய அளவில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பதாக , அமெரிக்காவின் பழமையான விமான நிலையங்கள் மற்றும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக 30.1 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் ஏற்பட்ட அவசரநிலையை தொடர்ந்து அந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதி வாரங்களுக்குள், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றம் இதற்கான நிதியை அங்கீகரிக்க வேண்டும் என்று நிர்வாகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





