செய்தி விளையாட்டு

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் பெரும் சரிவு: கம்பீர் அதிருப்தி

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தமை குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் கவலை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தமை குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த ஆண்டு தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இந்தக் குறைபாட்டைச் சரிசெய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான முந்தைய போட்டியிலும் இந்திய அணி 135 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடியபோது 111 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

“90 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தால் கவலைப்படாமல் இருக்க முடியுமா? ஓட்ட எண்ணிக்கையைவிட, 26 அல்லது 27 ஓவர்களுக்குள் அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்த விதமே அதிக கவலையளிக்கிறது” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களான மெட் ஹென்றி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் இந்திய வீரர்கள் தடுமாறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இறுதிப் போட்டி நாளை (15) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி