இலங்கை

சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு

  • November 13, 2026
  • 0 Comments

சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  லாக்ஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் 12.5 கிலோ  எரிவாயுவின் விலை 1,775  ரூபாய் அதிகரிக்கப்பட்டு 6,740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதேபோல்,  1,988 ரூபாயாக  இருந்த 5 கிலோ  எரிவாயுவின் விலை  732  ரூபாய் உயர்த்தப்பட்டு,  2,720 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் விலைகளுக்கு ஏற்ப இலங்கைக்கான எரிவாயு இருப்புகளை வாங்கும் செலவு அதிகரித்ததே இந்த விலை மாற்றத்திற்குக் காரணம் என்று அந்நிறுவனம் கூறுகிறது. […]